பாளையங்கோட்டையில் நடைபெற்ற தசரா விழாவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 12 சப்பரங்களில் பவனி வந்த அம்மன் உற்சவமூர்த்திகள் . படங்கள்: மு.லெட்சுமி அருண் 
Regional01

12 சப்பரங்களில் அணிவகுத்த அம்மன்கள் - பாளை. தசரா விழாவில் சூரசம்ஹாரம் :

செய்திப்பிரிவு

பாளையங்கோட்டையில் நடை பெற்ற தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று அதிகாலை நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் தசரா திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு இத் திருவிழா நடைபெற்றது.

விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஆயிரத்தம்மன், தெற்கு முத்தாரம் மன், விஸ்வ கர்மா உச்சி மாகாளி, தேவி உலகம்மன், புது உலகம்மன், தூத்துவாரி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் உற்சவ மூர்த்திகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் பவனியாக எருமைக்கடா மைதானத்தில் அணிவகுத்தனர். அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மகிஷாசூரனை ஆயிரத்தம்மன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT