Regional01

பட்டாசு விற்க உரிமம் பெற விண்ணப்பிக்க 22-ம் தேதி கடைசி நாள் :

செய்திப்பிரிவு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் வேண்டுவோர் வரும் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசு விற்பனை செய்ய விரும்பும் சிறு வணிகர்களின் நலன் கருதி, தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களது வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக, இணையதளம் மூலமாக தற்காலிக உரிமம் பெற விண்ணப்பம் செய்யவும், உரிமங்களை பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது மனுதாரர்கள் வெடிபொருள் விதிகளின்படி, தேவைப்படும் ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையங்கள் ஏதேனும் ஒன்றில், சேவைக் கட்டணமாக ரூ.500 செலுத்தி, விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக விண்ணப்பிக்க 22-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்த மனுதாரர்கள், பொது சேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டுடன், புல வரைப்படம்- (6 நகல்கள்), கிரயப்பத்திர நகல்கள்-6 (அசல் மற்றும் 5 நகல்கள்), சேவைக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, முகவரிக்கான ஆதாரம், சொத்துவரி செலுத்தியதற்கான ரசீது மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றினை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்கப்பட்டால், இணையம் மூலமே தற்காலிக உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ப.முருகேசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT