Regional04

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் வேலைவாய்ப்பு பதிவு :

செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாயப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று பெறும் நாள் அன்று பள்ளிக்கு எடுத்து வர வேண்டும்.

வரும் 18-ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவு பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.

மேலும் https://tnvelaivaaippu.gov.in/ என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என்றுசேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT