Regional01

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - உயரழுத்த மின் கோபுரம் அமைக்க கடும் எதிர்ப்பு :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விளை நிலங்கள் வழியாக உயரழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சோமண்டார்குடி, மோகூர்,மோ. வன்னஞ்சூர் உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக, பவர்கிரிட் நிறுவனத்தின் சார்பில் உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் சோமண்டார்குடி, மோகூர் ஆகிய கிராமங்கள் வழியாக செல்லும் போது சுமார் 700க்கும் மேற்பட்ட மரங்கள் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்படும் மரங்கள் அனைத்தும் அரிய வகை மரங்களாக கருதப்படுகிறது. விவசாய நிலங்களில் நடப்படும் உயரழுத்த மின் கோபுரங்களால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களுடைய இடத்தில் உயர் கோபுர மின் அமைக்கக் கூடாது எனவும் அப்படி அமைக்கும் பட்சத்தில் அவர்களுக்கான உரிய தொகையை வழங்கி பிறகு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT