அருப்புக்கோட்டை அருகே கோட்டையூரில் பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன். 
Regional04

அருப்புக்கோட்டை அருகே நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை அருகே நீட்டிக்கப்பட்ட பேருந்து வழித் தடங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.

கோட்டையூர் ஊராட்சி பேருந்துநிலையம் மற்றும் கோட்ட நத்தத்தில், அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நீட்டிப்பு செய்யப் பட்ட வழித்தடத்துக்கான 3 பேருந்துகளை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சிவகாசியிலிருந்து மத்தியசேனை வழியாக ஆர்.ஆர்.நகர் வரை இயக்கப்பட்டு வந்த நகர பேருந்து ஆவுடையாபுரம் வழியாக கோட்டையூர் வரைக்கும், சாத்தூரிலிருந்து ஆர்.ஆர்.நகர் வரை இயக்கப்பட்டு வந்த நகர பேருந்து ஆவுடையாபுரம் வழியாக கோட்டையூர் வரைக்கும், சாத்தூரிலிருந்து ஆர்.ஆர்.நகர் வரை இயக்கப்பட்டு வந்த நகர பேருந்து பட்டம்புதூர் வழியாக கோட்டநத்தம் வரைக்கும் நீட்டிக் கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல மேலாண் இயக்குநர் திருவம்பலம் பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT