Regional04

அன்னதானப்பட்டியில் குடோனில் பதுக்கிய - ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

சேலத்தில் குடோனில் பதுக்கி வைத்த ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அன்னதானப்பட்டி கந்தப்பா காலனியில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அன்னதானப்பட்டி போலீஸார் நடத்திய சோதனையில், மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான குடோனை மதன் என்பவர் வாடகை எடுத்து, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

குடோனில் இருந்து கடைகளுக்கு ஆட்டோ மூலம் புகையிலைப் பொருட்களை விநியோகம் செய்து வந்துள்ளார். சோதனையில் குடோனில் இருந்து ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள 51 மூட்டைகளில் இருந்த புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாகியுள்ள மதனை போலீஸார் தேடி வருகின்றனர். தொடர்ந்து சேலம் மாநகரப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடக்கிறதா என மாநகர போலீஸார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT