திருச்சியில் ஏசி வசதியுடன் கூடிய 2 நகரப் பேருந்து சேவை நேற்று முன்தினம் தொடங்கியது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தில்லைநகர் வழியாக ரங்கத்துக்கு ஒரு பேருந்தும், துவாக்குடிக்கு மற்றொரு பேருந்தும் இயக்கப்படுகின்றன. பிற நகரப் பேருந்துகள்போல இந்த இரு பேருந்துகளும் நாள் முழுவதும் இயக்கப்படும்.
இந்த ஏசி நகரப் பேருந்துகளின் சேவை, நேற்று முன்தினம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கப்பட்டது.
இந்தப் பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.15, அதிகபட்சம் ரூ.30 என பயணக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.