Regional02

பாஜகவினர் சாலை மறியல் :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் மாவட்டத் தலைவர் கே.சிவசாமி தலைமையில் பாஜகவினர் நேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இரு கார்கள் மோதிக்கொண்டன. இதையடுத்து, அங்கு பட்டாசு வெடிக்கவும், இனிப்பு வழங்கவும் கூடாது என நகர காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். இதனால், காவல் ஆய்வாளரை கண்டித்து பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதன்பின், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர்.

SCROLL FOR NEXT