Regional05

அக்.22-ல் 8 இடங்களில் மறைமுகத் தேர்தல் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒன்றியத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் அக்.22-ம் தேதி நடைபெற உள்ளது.

இதேபோன்று, மாவட்டத்தில் புலிவலம், அரசர்குளம் கீழ்பாதி, ராஜேந்திரபுரம், கிள்ளனூர், செனையக்குடி, கும்மங்குடி, வேங்கிடகுளம் ஆகிய ஊராட்சிகளில் காலியாக உள்ள துணைத்தலைவர் பதவிகளுக்கும் அன்றைய தினம் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT