Regional02

ஒரே நாளில் 31 ரவுடிகள் கைது :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் 31 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர வாகன தணிக்கை மற்றும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை விடிய, விடிய நடைபெற்றது. அப்போது பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 31 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

இதுதவிர பழைய வழக்குகளில் ஈடுபட்டுள்ள 59 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டன.

SCROLL FOR NEXT