செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 
Regional04

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு - ஆலங்குளம் அருகே பொது மக்கள் சாலை மறியல் :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க ஏற்பாடு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட வர் களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT