Regional04

தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் :

செய்திப்பிரிவு

சங்கரன்கோவில் புதுமனை 1-ம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர், சங்கரன்கோவில் கோமதி அம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, வீட்டின் அருகே சிலர் சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதை, பார்த்திபன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், தலைமை ஆசிரியர் பார்த்திபனை தாக்கியுள்ளனர். காயம் அடைந்த அவர், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சங்கரன்கோவில் டவுன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT