மீண்டும் பணி வழங்க உதவியதற்காக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவுக்கு பேரூராட்சி சமுதாய பரப்புரை பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர். 
Regional04

சபாநாயகரை சந்தித்து சமுதாய பரப்புரையாளர்கள் நன்றி :

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் கடந்த ஆட்சியில் பேரூராட்சிகளில் 1,800- க்கும் மேற்பட்ட சமுதாய பரப்புரை பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் விரிவாக எடுத்துக்கூறி அதற்கான விண்ணப்பங்களை பெற்று அலுவல கத்தில் ஒப்படைக்கும் பணியினை இவர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்குமுன் உள்ளாட்சித் துறை உத்தரவின் பேரில் அனைவரும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மீண்டும் பணி வழங்க கோரி சட்டப் பேரவை தலைவர் அப்பாவுவிடம் சமுதாய பரப்புரை பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து சமுதாய பரப்புரையாளர்களின் நிலைமை குறித்து முதல் வரின் கவனத்துக்கு சட்டப் பேரவை தலைவர் கொண்டு சென்றார். சமுதாய பரப்புரையாளர்களை மீண்டும் பணியமர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சட்டப் பேரவை தலைவருக்கு சமுதாய பரப்புரையாளர்கள் நேரில் நன்றி தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT