திருநெல்வேலி மாவட்ட பிரம்மாகுமாரிகள் அமைப்பின் சார்பில் நவராத்திரி விழா கொண் டாடப்பட்டது. இதையொட்டி சிவமகா ஜோதி பவனத்தில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாகுமாரிகள் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் புவனேஸ்வரி வரவேற்றார். நிகழ்வில் சர்வசமய கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பி.டி. சிதம்பரம், செயலாளர் கோ. கணபதி சுப்பிரமணியன், துணைச் செயலாளர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.