திருப்பத்தூரில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்த கட்டிடத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த குரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பழனி. இவரது மகன் திருப்பதி (16). கட்டிடத் தொழிலாளி. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திருப்பத்தூர் சி.கே.ஆசிரமம் பகுதியில் வேலை முடிந்து அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி சென்றார்.
அப்போது, வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி அவர் கீழே விழுந்து காயமடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.