விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்த ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி. 
Regional02

சங்கரலிங்கனார் நினைவு தினம் அனுசரிப்பு :

செய்திப்பிரிவு

விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார், சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைக்காக 27.7.1956-ல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். 76-வது நாளான அக்.13-ம் தேதி சங்கரலிங்கனார் உயிர்துறந்தார்.

நேற்று அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி விருதுநகரில் உள்ள மணிமண்டபத்தில் அவரது உருவச் சிலைக்கு ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

SCROLL FOR NEXT