நாமக்கல்: ஆபத்து நிறைந்த பணிகளை மேற்கொள்வதால் ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துபடி வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்செங்கோட்டில் சங்க நாமக்கல் கோட்ட பேரவைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வேலு தலைமை வகித்தார். துணைத் தலைவர் விஜயன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் ராஜமாணிக்கம் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். சாலை பணியாளர் சங்க சிறப்பு மாநில மாநாடு டிசம்பர் மாதம் இறுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடத்தப்படும். சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.
சாலை பணியாளர்களுடைய வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி 10 ஆண்டுக்கு மேலாக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்கள் ஆபத்து நிறைந்த பணிகளை மேற்கொள்வதால் ஆபத்துபடியாக ஊதியத்தில் 10 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியம், மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் உட்பட பலர் கல்நது கொண்டனர்.