Regional01

சேலம் மாநகராட்சியில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை :

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது கள ஆய்வு செய்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம், கொண்டலாம்பட்டி மண்டலப் பகுதிகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இரண்டு நாட்களாக 25-க்கும் மேற்பாட்ட மனுக்களுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கையை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் மேற்கொண்டார்.

இதன்படி, சேலம் அம்மாப்பேட்டை மண்டலம் சடகோபன் வீதியில் பாதாள சாக்கடை திட்ட கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதை சீர் செய்ய குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார். மேலும், சாக்கடை கால்வாய் அடைப்பு சீர் செய்யும் பணியை ஆணையர் ஆய்வு செய்தார். மேலும், பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது ஆணையர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT