சேலத்தில் கடையின் மேற்கூரையை துளையிட்டு ஒரு கிலோ வெள்ளிக் கொலுசை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (38). இவர் சோளம்பள்ளத்தில் வெள்ளிக் கொலுசு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடைக்கு வந்தபோது, கடையின் மேற்கூரை துளையிடப்பட்டு இருந்தது. மேலும், கடையில் இருந்த ஒரு கிலோ வெள்ளிக் கொலுசை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இதுதொடர்பான் புகாரின் பேரில், சூரமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வெள்ளிக் கொலுசை திருடியவர்களை தேடி வருகின்றனர்.