Regional03

வாகன நெரிசலைக் குறைக்க சிசிடிவி கேமரா பொருத்தக் கோரி மனு :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக காவேரிப் பட்டணம் இளைஞர்கள் அளித்த மனுவில், காவேரிப்பட்டணம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரு கின்றனர். தங்களின் அன்றாட தேவைகளுக்காக காவேரிப் பட்டணம் நகருக்கு, கார், இரு சக்கர வாகனங்களில் வந்து செல் கின்றனர். இதன் காரணமாக நகரில், தினந்தோறும் போக்கு வரத்து நெரிசலுடன் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே நகர்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்ய ஏதுவாக கூடுதல் போலீஸார் நியமிக்க வேண்டும்.

இதேபோல, கடந்த, 2019-ம் ஆண்டுக்கு முன்னர் வரை பனகல் தெரு ஒருவழிபாதையாக இருந்தது. தற்போது அதையும் இருவழிபாதையாக மாற்றியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.

மேலும் சாலைகளில் அபாயகரமான வகையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்காணிக்க ‘சிசிடிவி’ கேமரா வைக்கவும் பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே கூடுதல் போக்குவரத்து போலீஸாரையும், ‘சிசிடிவி’ கேமரா அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT