Regional02

குமரியில் பாஜக இன்று உண்ணாவிரதம் :

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: சரஸ்வதி பூஜைக்கு அலங்கார விளக்குகளோ, கலை நிகழ்ச்சிகளோ, ஒலி பெருக்கிகளோ அமைப்பதற்கு தடைவிதித்து இந்துக்களின் மனதை புண்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்துக்களின் பாரம்பரிய விழாக்களுக்கு தடைவிதிக்கும் தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (14-ம் தேதி) காலை 10 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT