Regional02

குளச்சலில் செல்போன் கடைகளில் திருட்டு :

செய்திப்பிரிவு

குளச்சல் சாஸ்தான்கரையைச் சேர்ந்தவர் பக்ருதீன்(36). இவர் குளச்சல் பீச் ரோட்டில் செல்போன்கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே ரூ.4 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருடப்பட்டிருந்தன. இதேபோல் குளச்சல் அருகே ரீத்தாபுரத்தில் ஜெனிஷ் என்பவரின் செல்போன் கடையை உடைத்து செல்போன்கள் திருடப்பட்டிருந்தன. இரு சம்பவங்களிலும் ஒரே கும்பல் தான் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT