தஞ்சாவூரில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்குகிறார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா. 
Regional05

தஞ்சாவூரில் தலைக்கவசம் அணிந்து சென்ற - இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி பாராட்டிய எஸ்.பி :

செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிக ளுக்கு மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் ரவளிப்ரியா நேற்று இனிப்பு வழங்கிப் பாராட்டினார்.

தஞ்சாவூர் பெரியகோயில் அருகே நகரப் போக்குவரத்துக் காவல் ஒழுங்குப் பிரிவு சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த எஸ்.பி ரவளிப்ரியா தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தார். மேலும், தலைக் கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி, பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ரவளிப்ரியா கூறியது: சாலையில் செல்லும்போது தலைக்காயம் ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே, வாகனம் ஓட்டி கள் மட்டுமில்லாமல், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக் கவசம் அணிய வேண்டும். இதே போல, காரில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். மாவட்டத்தில் தலைக் கவசம், சீட் பெல்ட் அணி யாதது உள்ளிட்ட வகைகளில் நாள் தோறும் 1,800 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்றார்.

நகர டிஎஸ்பி கே.கபிலன், போக்குவரத்துக் காவல் ஒழுங்குப் பிரிவு ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT