மயிலாடுதுறையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், மறுமுத்திரையிடப்படாத எடை அளவைகள் பறிமுதல் செய் யப்பட்டன.
திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ப.பாஸ்கரன் தலைமையில், மயிலாடுதுறை தொழிலாளர் உதவி ஆய்வர்கள் மு.ராதிகா, அ.சிவகாமி, முத்திரை ஆய்வர் ம.கார்த்திகேயன் மற்றும் போலீஸார் அடங்கிய குழு நேற்று முன்தினம் மயிலாடுதுறையில் பெரிய கடைத் தெரு, பேருந்து நிலையம் அருகில் உள்ள காய்கறி, பூக் கடைகள், பழக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வின்போது, உரிய காலத்தில் உரிய மறுமுத்திரையிடாத எடை அளவைகள், தரப்படுத்தப்படாத அளவைகளான இரும்பு படிகள், தராசுகள் பறிமுதல் செய் யப்பட்டன. மேலும், எலெக்ட்ரானிக் தராசு கள் 16, மேசை தராசுகள் 6, வட்ட தராசுகள் 1, இரும்பு எடைக்கற்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப் பட்டன.
“தரப்படுத்தப்பட்ட, அரசால் முத்திரையிடப்பட்ட எடை அளவை களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தரப்படுத்தப்படாத அளவைகளை பயன்படுத்தினால் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம், 2-வது குற்றமாக இருந்தால் குறைந்தபட்சமாக 3 மாத சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனையும் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. முத்திரையிடப்படாத எடையளவைகளில் முரண்பாடு காணப்பட்டால், அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம், 2-வது குற்றமாக இருந்தால் அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனையும் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே, அனைத்து வியாபாரிகளும் முத்திரையிட்ட, தரப்படுத்தப்பட்ட எடை அளவைகளை வியாபா ரத்தில் பயன்படுத்தி, நுகர்வோர் களின் நலனை பாதுகாக்க வேண் டும். தங்கள் கடையில் பயன்படுத் தப்படும் எடை அளவைகளின் முத்திரைச் சான்றிதழை மற்றவர் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும். தவறினால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ப.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.