Regional01

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் திருட்டு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடியை சேர்ந்த முருகன் (45) என்பவர் பாளையங்கோட்டை கேடிசி நகர் மங்கம்மா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் நிதி நிறுவனம் மற்றும் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்தார்.

பாளையங்கோட்டை வி.எம். சத்திரத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் இந்நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றினார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. இதை நோட்ட மிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் கம்ப்யூட் டர்கள், பிரின்டர் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்று ள்ளது நேற்று தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT