Regional03

உள்ளாட்சித் தேர்தலில் ஜொலிக்காத கட்சிகள் : வைப்புத் தொகையையும் பறிகொடுத்தன :

செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டது. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாஜக தோல்வியடைந்தது.

திமுக கூட்டணி பெரும்பாலான வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தாலும் அந்த கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. தனித்து போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஊராட்சி ஒன்றியக்குழுவில் 2 வார்டுகளில் வெற்றி பெற்றது.

நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், புதிய தமிழகம், ஆம் ஆத்மி, பாமக ஆகியவை தனித்து போட்டியிட்ட நிலையில் இக்கட்சி வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. பல வார்டுகளில் இந்த கட்சிகளின் வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுயேச்சை வேட்பாளர்கள் 10 பேர் ஒன்றியக்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், புதிய தமிழகம், ஆம் ஆத்மி, பாமக போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

SCROLL FOR NEXT