TNadu

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தம் :

செய்திப்பிரிவு

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் வரை விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரம்அடைந்துள்ளது.

இதையடுத்து, அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நேற்று காலை 8 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது.

கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 650 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து நேற்று 19 ஆயிரத்து 68 கனஅடியாக அதிகரித்தது. 81.47 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 82.92 அடியானது. நீர்இருப்பு 44.92 டிஎம்சி-யாக உள்ளது.

SCROLL FOR NEXT