பல்லடம் அருகே உள்ள கிராமப் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன், திருப்பத் தூரை சேர்ந்த சதீஷ் (20) என்பவர்செல்போன் மூலம் பழக்கமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருமண ஆசை காட்டி சிறுமியை சதீஷ் கடத்திச் சென்றுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமியை திருமணம் செய்துகொண்ட சதீஷ், பாலியல் துன்புறுத்தல் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மீட்ட போலீஸார், போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் சதீஷை கைது செய்தனர்.