Regional02

வடலூரில் 4 வீடுகளில் தொடர் திருட்டு :

செய்திப்பிரிவு

வடலூர் ராகவேந்திரா சிட்டி 6வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் சிவகுமார்( 52). இவர் வெளிநாட்டில் பணியாற்றி விட்டு தற்போது விடுமுறையில் வீட்டில் உன்ளார்.

நேற்று முன் தினம் சிவகுமார் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை, 40 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிமேரி (62) வீட்டிலும் நேற்று முன்தினம் இரவு பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் நகை, 12 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.

மேலும் என்.எல்.சி ஆபீஸர் நகரில் கிருஷ்ணமூர்த்தி மனைவி சாந்தா, அதே பகுதியில் வசித்துவரும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சக்கரவர்த்தி ஆகியோர் வீட்டிலும் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது.

இச்சம்பவங்கள் குறித்து வடலூர் போலீஸார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடலூரில் ஒரே இரவில் 4 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT