கே.வி.சுப்பிரமணி. 
Regional01

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற ராமாலை ஊராட்சி மன்ற தலைவர் :

செய்திப்பிரிவு

குடியாத்தம் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கே.வி.சுப்பிரமணி என்பவர் வெற்றிபெற்றுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமாலை கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், ராமாலை கிரா மத்தைச் சேர்ந்த கே.வி.சுப்பிரமணி என்பவர் 2,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. குடியாத்தம் ஒன்றியத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நபராக கே.வி.சுப்பிரமணி தேர்வாகியுள்ளார்.

ராமாலை கிராம ஊராட்சியில் மொத்த வாக்குகள் 5,488 ஆகும். தேர்தலில் 4,308 வாக்குகள் பதிவான நிலையில் சுப்பிரமணி 3,249 வாக்குகளும், அவரது எதிர்த்து போட்டியிட்டு இரண்டாமிடம் பிடித்த வேட்பாளர் வெங்கடேசன் என்பவர் 835 வாக்குகளும், மற்றொரு வேட்பாளர் 187 வாக்குகளும் பெற்றுள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT