பரந்தாமனுக்கு சான்றிதழ் வழங்கிய தேர்தல் அதிகாரி யுவராஜ். 
Regional02

ஒரு வாக்கில் தலைவரான வேட்பாளர் :

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கே.எம்.ஜி கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இதில், மோர்தானா கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பரந்தாமன் என்பவர் 464 வாக்குகளும் , சீதாராமன் என்பவர் 462 வாக்குகளும் பெற்றனர். இரண்டு வாக்குகள் பின்தங்கிய சீதாராமனுக்கு தபால் ஓட்டு மூலம் கூடுதலாக 1 வாக்கு கிடைத்தது. இதன்மூலம் அவரது வாக்கு எண்ணிக்கை 463 -ஆக உயர்ந்தது. ஆனால், பரந்தாமனுக்கு தபால் ஓட்டும் கிடைக்காத நிலையில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் பரந்தாமன் வெற்றிபெற்றதாக அறிவிக் கப்பட்டது. அவருக்கு வெற்றிக்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி யுவராஜ் வழங்கினார்.

SCROLL FOR NEXT