புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர் தல் நடவடிக்கைகளை தற்காலிக மாக நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
புதுச்சேரியில் 10 ஆண்டு களுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர் தல் அறிவிக்கப்பட்டது. இதில், பட்டியல் இனத்தவர், பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கான வார்டு கள் ஒதுக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக கூறி முத்தியால் பேட்டைதொகுதி சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் மற்றும் பெரியண்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கை கடந்த அக்.5-ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, ‘வார்டுகள் ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும்’ என அறிவுறுத்தி, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற அனுமதித்தனர். மேலும், புதுச்சேரி நகராட்சி சட்டப்படி 5 நாட்களில் புதிய அறிவிப்பாணை வெளியிடவும் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்நிலையில், புதுச்சேரி மாநில திமுக அமைப்புச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான ஆர்.சிவா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த அக்.5-ல் பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி, உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி புதுச்சேரி அரசு கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்திருந்த அரசாணைகளை மாநில தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. இது சட்டவிரோதம்.
எனவே, கடந்த அக்.8-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளுக்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் புதிய அட்டவணை அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு, அவசர வழக்காக நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங் கிய அமர்வில் நேற்று விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட் டது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ‘‘புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்காக ஏற்கெனவே குளறு படியாக பிறப்பிக்கப்பட்டிருந்த அறிவிப்பாணையை மட்டுமே திரும்பப் பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. பிற்படுத்தப் பட்டோர், பழங்குடியினருக்கு வழங்கப்பட்டிருந்த இடஒதுக் கீட்டை திரும்பப் பெற எந்த உத்தர வும் பிறப்பிக்கவில்லை. அமைச் சரவை எடுத்த முடிவின்கீழ் வழங் கப்பட்ட இடஒதுக்கீட்டை திரும்பப் பெறுவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. எனவே, புதிய அட்டவணைப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.
சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ் குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரே சன், ‘‘இடஒதுக்கீடு வழங்காமல் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காமல் தேர்தலை நடத்த அனுமதிக்கக் கூடாது’’ என வாதிட்டார்.
புதுச்சேரி அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர்கள் சந்திரசேகர் மற்றும் மாலா ஆகியோர், ‘‘பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மக்கள்தொகை குறித்த புள்ளி விவரங்கள் ஏதும் இல்லை என் பதால் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்கெனவே இருந்த இடஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டது. துணை நிலை ஆளுநர், முதல்வரின் ஒப்புத லுடன்தான் இடஒதுக்கீடு திரும் பப் பெறப்பட்டு அரசாணை பிறப் பிக்கப்பட்டது’’ என தெரிவித்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், ‘‘இடஒதுக் கீட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய அனுமதியளித்த நிலையில், இடஒதுக்கீட்டை திரும்பப் பெற்றது ஏன்’’ என மாநில தேர்தல் ஆணை யத்துக்கு கேள்வி எழுப்பினர். பின்னர், அரசியலமைப்பு சட்டவிதி களை முறையாக பின்பற்ற வில்லை எனக்கூறி, புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கை களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக முழுமையான விவரங்களுடன் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தர விட்டு, விசாரணையை அக்.21-க்கு தள்ளிவைத்தனர். அத்துடன் இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி பரிந் துரைத்துள்ளனர்.