கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் தற்காலிகமாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் பணி கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் நேற்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாங்கள் 11 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கரோனா பேரிடர் காலத்தில் கடந்த 3.10.2020 முதல் 30.9.2021 வரை ஒரு வருடம் தூய்மைப் பணியாளர்களாக தற்காலிகமாக பணியாற்றி வந்தோம். இரவு, பகல் பாராமல் எங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றினோம். கரோனாவை எதிர்கொள்ள அனைத்து பயிற்சிகளையும் அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொண்டோம். ஆனால் முன்னறிவிப்பின்றி எங்களை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டு, உணவிற்கே வழியில்லாமல் தவிக்கிறோம். எங்களின் வாழ் வாதாரத்தை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில் தொடர்ந்து தற்காலிக பணியாளர் களாக பணியாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்ணா போராட்டம்
கோழி கழிவுகளால் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. கோழிப் பண்ணைகளால், 2 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். ஏற்கெனவே 4 முறை மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர்.