Regional03

750 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அடுத்த காவிலிபாளையம் நான்கு ரோடு பகுதியில், நேற்று முன்தினம் இரவு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி ஆட்டோவை சோதனை செய்ததில், 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசி நீலி பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (37), புளியம்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த குமார் (42) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், ஈரோட்டில் இருந்து ரேஷன் அரிசியை கடத்திச்சென்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத்தவர் களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினி ஆட்டோவைப் பறிமுதல் செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT