நிலுவைச் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் பணிபுரியும் சமையல் பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சமையல் பணியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரு ஆண்டாக சம்பளம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்கள் நேற்று நிலுவைச் சம்பளம் வழங்க வலியுறுத்தி, தங்கள் குடும்பத்தினருடன் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர்.
பின்னர் தர்ணாவில் ஈடுபட்டவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.