Regional03

வடிகால் வசதி கோரி கொட்டும் மழையில் மக்கள் மறியல் :

செய்திப்பிரிவு

உடையார்பாளையம் அருகே வீட்டுக்குள் மழைநீர் புகுந்ததால் வடிகால் வசதி செய்து தரக்கோரி நேற்று மாலை துளாரங்குறிச்சி கிராம மக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே துளாரங்குறிச்சி கிராமத்தில், திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் வசதி அமைக்காமல் சாலை அமைக்கப்பட்டு வருவதால், நேற்று பெய்த மழைநீர் வெளியேற வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்தது.

இதையடுத்து, உடனடியாக வடிகால் வசதி செய்து தர வலியுறுத்தி, அப்பகுதியில் கிராம மக்கள் நேற்று கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த உடையார்பாளையம் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT