அரியலூரை அடுத்த வாலாஜாநகரம் கிராமத்தில், வயலில் இறங்கி, நாற்று நட்டு, கரோனா தடுப்பூசி குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி. 
Regional03

வயலில் நாற்று நட்டு தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரி :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி 5-ம் கட்ட மெகா முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிலையில், அரியலூர் அருகேயுள்ள வாலாஜாநகரம் பகுதியில் நடவு வேலைக்கு பெண்கள் சென்றுவிடுவதால் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்படுவதை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி அறிந்தார். இதையடுத்து, மருத்துவக் குழுவினருடன் அவர் வயல் பகுதிக்கே சென்றார். அங்கு நாற்று நடும் பெண்களுடன் அவரும் வயலில் இறங்கி நாற்று நட்டு, பாட்டுப் பாடி, ஆட்டம் ஆடி, தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே, அங்கு நடவுப் பணியில் ஈடுபட்டிருந்த 25 பேர் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

SCROLL FOR NEXT