Regional04

திருச்சியில்ரூ.20 லட்சம் : தங்கம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்தது. அதில் பயணம் செய்தவர்கள், அவர்களின் உடைமைகளை விமானநிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பயணி ஒருவர் ரூ.20.83 லட்சம் மதிப்பிலான 435 கிராம் தங்கத்தை சூட்கேஸூக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT