Regional02

அயப்பாக்கம் ஏரிக்கரையில் 3,000 பனை விதைகள் நடவு :

செய்திப்பிரிவு

அயப்பாக்கம் ஏரி 45 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கரையில் நேற்று இந்தியன் ஆயில் நிறுவனம், எக்ஸ்னோரா, கிரீன் நீடா அமைப்பு, குழலோசை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்துபனை விதைகளை விதைக்கும் பணியை மேற்கொண்டனர்.

இப்பணியில் 150-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பணி ஓய்வுபெற்ற அலுவலர்கள், பெண்கள் கலந்து கொண்டு 3 ஆயிரம் பனை விதைகளை ஐந்தடிக்கு ஒன்று வீதம் விதைத்தனர்.

எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் எம்.பி.நிர்மல் 78-வது பிறந்தநாள் சிறப்பு புங்கன் மரக்கன்றை அந்த அமைப்பின் தலைவர் எஸ்.செந்தூர் பாரி நட்டார். விழாவில் டீம் கிரீன் தலைவர் மோகனசுந்தரம், விதை விதைப்போம் அமைப்பின் அமைப்பாளர் பத்மபிரியா, அத்திகுழு அமைப்பு அமைப்பாளர் வானவன், லயன்ஸ் கிளப் ஆப் மெட்ராஸ் பார்க் டவுன் தலைவர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு, குழலோசை அமைப்பின் தலைவர் ராஜேஷ் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT