விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தபால் தலை புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டோர். 
Regional02

தபால் தலை புகைப்பட கண்காட்சி :

செய்திப்பிரிவு

உலக தபால் தலைகள் தினத்தை முன்னிட்டு விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் ‘தபால் தலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்கள்’ என்ற தலைப்பில் புகைப் படக் கண்காட்சி நடைபெற்றது.

இதில், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், அழகுமுத்துக் கோன், மகாத்மா காந்தி, நேரு, வ.உ.சி, பாரதியார், ராஜாஜி காமராஜர், பகத்சிங், போன்ற பெருந்தலைவர்கள் நினைவாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட தபால் தலைகள் மற்றும் தலைவர்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றன. விருதுநகர் அரசு அருங்காட்சியக்கத்தில் நடைபெறும் இக்கண்காட்சி இம்மாதம் 19-ம் தேதி வரை நடைபெறும் என அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT