Regional02

தேனியில் வெள்ள அபாய இடங்கள் கண்காணிப்பு :

செய்திப்பிரிவு

வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தேனியில் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அ.கார்த்திக் தலைமை வகித்தார். ஆட்சியர் க.வீ.முரளிதரன் முன்னிலை வகித்தார். கண்காணிப்பு அலுவலர் பேசுகையில், மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள 43 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்க வைக்க 66 தங்கும் இடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பேரிடர் தொடர்பாக 1077 அல்லது 04546- 261093 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

SCROLL FOR NEXT