பர்கூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
பர்கூர் வட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஷெம் ரிபத் (37) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையறிந்த பெண்ணின் பெற்றோர் ஷெம் ரிபத்தை பிடித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் விசாரணை நடத்தி ஷெம் ரிபத்தை கைது செய்தனர்.