Regional02

மரத்தை வெட்டி விற்ற ஊராட்சித் தலைவர் மீது வழக்கு பதிவு :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மேலமாத்தூர் கிராம ஊராட்சித் தலைவராக இருப்பவர் மணிவண்ணன்(42). இவரது உத்தரவின்பேரில், அக்.5 அன்று பிள்ளையார்குட்டை கரையில் உள்ள 12 டன் எடையுள்ள ஒரு புளிய மரத்தை அழகிரிபாளையத்தைச் சேர்ந்த மருதமுத்து மகன் குமார் என்பவர் வெட்டி விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து மேலமாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ரஜினி, குன்னம் காவல் நிலை யத்தில் அளித்த புகாரின் பேரில், ஊராட்சித் தலைவர் மணி வண்ணன், குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT