Regional02

மாணவர்களுக்கு போட்டிகள் :

செய்திப்பிரிவு

பள்ளிக்கல்வித் துறை, தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம் மற்றும் தென்காசி கேன்சர் சென்டர் சார்பில் மாவட்ட அளவில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர் களுக்கு கேன்சர் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெறுகிறது.

6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உணவு பழக்க வழக்கங்கள், தொடர் உடற்பயிற்சி, கேன்சர் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப நிலை கண்டறிதல், மரபுவழி விழிப்புணர்வு, பொருளாதார மற்றும் குடும்ப இழப்பு ஆகிய தலைப்புகளில் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி வருகிற 17-ம் தேதி காலை 10 மணிக்கு தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் நடைபெறும். ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்கள் படைப்புகளை வரும் 17-ம் தேதிக்குள் தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நூலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT