Regional01

ரயில் நிலையத்தில் செல்போன் திருடியவர் கைது :

செய்திப்பிரிவு

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வரும் மக்கள் ரயிலுக்காக காத்திருக்கும் சமயங்களில் செல்போன் சார்ஜ் போடுவது வழக்கம். அச்சமயங்களில் செல்போன்கள் திருட்டு நடைபெறுவதாக தொடர்ச்சியாக புகார் எழுந்து வந்தது. இதையடுத்து ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஈரோடு ரயில் நிலையத்தில் சுற்றி வந்த இளைஞரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சவுண்டப்பன் (35) என்பதும், ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 4 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT