Regional01

ஆவின் நிர்வாகத்தை கண்டித்து மறியல் :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராமத்தில் பால் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில மாதங்களாக பால் உற்பத்தியாளர்களுக்கு முறையாக பணம் பட்டுவாடா செய்யவில்லை எனவும், பாலை முழுமையாக கொள்முதல் செய்வதில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத ஆவின் நிர்வாகத்தை கண்டித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பால் உற்பத்தியாளர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி மதன், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு, முக்கிய நபர்கள் சிலர் உள்ளே சென்று ஆட்சியரிடம் மனுஅளித்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT