Regional02

கரூரில் 99 மில்லி மீட்டர் மழை பதிவு :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த இடியுடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்): கரூர் 99, அணைப்பாளையம் 46, பஞ்சப்பட்டி 39.80, குளித்தலை 35, அரவக்குறிச்சி 30.40, மாயனூர் 25, கிருஷ்ணராயபுரம் 17, மைலம்பட்டி 12, பாலவிடுதி 9, தோகைமலை 8, க.பரமத்தி 6.80.

பெரம்பலூரில் நேற்று முன்தினம் மதியம் முதல் நேற்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலைவரை பதிவான மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்): அகரம் சீகூர் 98, பெரம்பலூர் 66, லப்பைக்குடிகாடு 55, செட்டிக்குளம் 52, எறையூர், வேப்பந்தட்டை தலா 33, புதுவேட்டக்குடி 24, பாடாலூர் 17, வி.களத்தூர் 13, தழுதாளை 11, கிருஷ்ணாபுரம் 4.

SCROLL FOR NEXT