Regional02

தபால் வாக்கு கோரிஅங்கன்வாடி ஊழியர்கள் மறியல் :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிக்கான முதல் கட்டத் தேர்தலில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டது. இவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

எனவே இவர்கள் தபால் வாக்குகள் வழங்கக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேர்தலுக்கு முன்பே தபால் வாக்குகள் சேர்க்கப்பட்டுவிட்டன என்பதால் தேர்தல் பணிக்குச் சென்ற அங்கன்வாடி ஊழியர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT