Regional02

உண்டு உறைவிடப் பள்ளி நடத்த : தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியை நடத்துவதற்கு பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்காக சின்னபெண்ணாங்கூரில் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உடைவிடப் பள்ளியை நடத்துவதற்கு அனுபவம் மற்றும் ஆர்வமுள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்ட திட்ட அலுவலகத்தில் பெற்று, சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 20-ம் தேதி கடைசி நாள்.

SCROLL FOR NEXT