Regional01

அனுமதியின்றி மது விற்பனை: நடவடிக்கை கோரி மறியல் :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே அனுமதியின்றி கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தா.பழூர் அருகேயுள்ள கொலையனூர் கிராமத்தில், சிலர் அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானங்களை விற்று வருவதாகவும், இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விக்கிரமங்கலம் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT